தமிழ்நாடு

லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்

லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்

webteam

சென்னைக்கு அருகேயுள்ள கேளம்பாக்கத்தில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். 

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரனுக்கு சொந்தமான வீட்டுமனை பிரிவை வரன்முறை படுத்த, அந்தப் பகுதி ஊராட்சி செயலாளர் குமாரசாமி 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் அளிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய பணத்தை கொடுக்க பிரபாகரன் சென்றார். 

அப்போது, புதுப்பாக்கம் ஊராட்சி செயலாளர் வடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலக பொதுமேலாளர் பூபதி ஆகியோரிடம் பணத்தை கொடுக்குமாறு குமாரசாமி கூறியுள்ளார். அதன்படி, வடிவேல், பூபதி ஆகியோர் லஞ்ச பணத்தை வாங்கும் போது, அவர்கள் கையும், களவுமாக கைது செய்யப்பட்டனர். மேலும், இதுதொடர்பாக கேளம்பாக்கம் ஊராட்சி செயலர் குமாரசாமியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.