தமிழ்நாடு

வந்தாச்சு தீபாவளி! யாருக்கெல்லம் தமிழக அரசின் போனஸ்-கருணை தொகை கிடைக்கப்போகிறது தெரியுமா?

webteam

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகம் ஆகியவை மாநில பொதுத்துறை நிறுவனங்களாக உள்ளன. அந்நிறுவனங்களில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்களுக்கு 10 சதவீதத்துக்கு மிகாமல், போனஸ் 8.33% மற்றும் கருணைத் தொகை 1.67% வழங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக சுமார் ரூ 8,400 பெறுவர் என கூறப்படுகின்றது. தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 2,87,250 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: 'எங்க பணத்த மீட்டுத்தாங்க' - திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு