தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு?

நிவேதா ஜெகராஜா

தமிழ்நாட்டில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி கடைசி நாளாக இருக்கும் நிலையில், இந்த கால நீட்டிப்பு தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக சம்பா, தாளடி பயிர்களுக்கான பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்தக் கோரிக்கையை தொடர்ந்து, டெல்டா பகுதிகளில் பெய்த கனமழையும் கருத்தில் கொண்டு, பயிர் காப்பீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்த தகவலில், “தமிழ்நாட்டில் சனி (13.11.2021) மற்றும் ஞாயிறு (14.11.2021) ஆகிய நாள்களில் பயிர் காப்பீடு செய்வதற்கான இ-சேவை மையங்கள் இயங்கும். அன்றும் பயிர் காப்பீடு செய்யலாம். கால நீட்டிப்பு குறித்து கடிதம் எழுதியுள்ளோம். விரைவில் அதுகுறித்த தகவல் வரும் என எதிர்ப்பார்க்கிறோம். அதுவரை எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாதென்பதை கருத்தில் கொண்டு வரும் சனி, ஞாயிறுகளில் காமன் சர்வீஸ் சென்டர்களிலும், தனியார் சர்வீஸ் சென்டர்களிலும் பயிர் காப்பீடு செய்யப்படும். மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.