தமிழ்நாடு

சிறுவனின் தொடையில் குத்திய மரக்கட்டை -அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை

சிறுவனின் தொடையில் குத்திய மரக்கட்டை -அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை

kaleelrahman

தொடையில் 3 அடி தேக்கு மரக்கட்டை குத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த சிறுவனுக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்து தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் காப்பாற்றினர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு படிக்கும் ராஜா(11 வயது), அப்பகுதியில் உள்ள மரத்தின்மேல் ஏறி கீழே குதித்து விளையாடியுள்ளான். அப்போது, நிலத்தில் நட்டுவைத்திருந்த 3 அடி நீளமுள்ள மரக்கட்டை சிறுவன் ராஜாவின் இடது தொடையில் ஈட்டிபோல் குத்தி மறுபுறம் வந்துள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளான். சிறுவன் ராஜாவுக்கு மருத்துவர் கோபிநாத் தலைமையிலான குழுவினர் ரத்த நாளங்களும், நரம்புகளும் பாதிக்காத வகையில் உடனடியாக அறுவைசிகிச்சை செய்து மரக்கட்டையை அகற்றி சிறுவனை காப்பாற்றியுள்ளனர். ஒருமணி நேரத்தில் சிறப்பாக அறுவைசிகிச்சை செய்து சிறுவனை காப்பாற்றிய மருத்துவக் குழுவை, டீன் ரவிக்குமார் பாராட்டியுள்ளார்.