தமிழ்நாடு

ஒரு மாதத்திற்கு முன்பு சளி, காய்ச்சல் இருந்திருந்தால்... அரசின் அதிரடி முடிவு

ஒரு மாதத்திற்கு முன்பு சளி, காய்ச்சல் இருந்திருந்தால்... அரசின் அதிரடி முடிவு

webteam

ஒரு மாதத்துக்கு முன்பு யாருக்கெல்லம் சளி, காய்ச்சல் இருந்ததோ அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவை பொருத்தவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,601ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3252 பேராக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 1520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 17 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 457 ஆக உள்ளது. ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை 46, 985 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பு யாருக்கெல்லம் சளி, காய்ச்சல் இருந்ததோ அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்டைன்மெண்ட் பகுதி மட்டுமின்றி மற்ற இடங்களில் உள்ள பொது மக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி தகவல் தெரிவித்துள்ளார்.