தமிழ்நாடு

'அரசு ஒப்பந்த வாகனங்களில் 'G' ஸ்டிக்கர் ஒட்டினால் பறிமுதல்' - காவல்துறை எச்சரிக்கை

'அரசு ஒப்பந்த வாகனங்களில் 'G' ஸ்டிக்கர் ஒட்டினால் பறிமுதல்' - காவல்துறை எச்சரிக்கை

kaleelrahman

அரசு அலுவலகங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் வாகனங்களில் 'G' என்ற எழுத்தை பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

மத்திய - மாநில அரசுகளின் பல துறைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் தனியார் வாகனங்கள் 'G' என பதிவெண்களில் ஸ்டிக்கர் ஒட்டி பயன்படுத்தி வருவது வாகன தணிக்கையில் கண்டறியப்பட்டது. இந்த வாகனங்கள் அரசு வாகனம் என்ற பெயரில் தனிப்பட்ட வேலைகளுக்கும் முறைகேடுகளுக்கும் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. இந்நிலையில் காவல் துறையின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.