ஆம்புலன்ஸை மறித்து நின்ற அரசு பேருந்து pt
தமிழ்நாடு

வேலூர் | ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் பரோட்டா வாங்கசென்ற ஓட்டுநர், நடத்துநர்; உடனே பாய்ந்த நடவடிக்கை!

ஆம்புலன்ஸை மறித்து அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பரோட்டா வாங்க சென்ற சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.

PT WEB

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுண்ணாம்பேட்டை பகுதியில் நேற்று அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. பேருந்துக்கு பின்னால் ஆம்புலன்ஸ் வந்தபோதும், அதற்கு வழிவிடாமல் அரசுபேருந்து வழித்தடத்திலேயே நின்றுள்ளது. வண்டியை நிறுத்திவிட்டு பேருந்து நடத்துனர் பரோட்டா வாங்க சென்றதாக வீடியோ வைரலானது.

இருவரும் பணியிடை நீக்கம்..

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுண்ணாம்பேட்டை பகுதியில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள துரித உணவகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு பரோட்டா வாங்குவதற்க்காக பேருந்தை நிறுத்தியுள்ளனர்.

ஆனால் பேருந்துக்கு பின்னால்வந்த ஆம்புலன்ஸ் நின்றபோது அதற்கு வழிவிடாமல் பரோட்டா வாங்க சென்றுள்ளனர். பேருந்து நின்றபகுதி குறுகிய சாலையாக இருந்ததால், நோயாளியை ஏற்றுக்கொண்டு வந்த ஆம்புலன்ஸ் அரசு பேருந்தை கடக்க முடியாமல் ஆம்புலன்ஸ் அதே இடத்திலேயே நின்றுள்ளது.

ஆம்புலன்ஸை மறித்து நின்ற அரசு பேருந்து

நடத்துனரும் அரசு பேருந்தில் இருந்து இறங்கி ஹோட்டலுக்கு பரோட்டா வாங்க சென்றுள்ளார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இச்செயலில் ஈடுபட்ட பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும். அவர்கள் முறையான பயிற்சிக்கு அனுப்பப்பட்டு இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.