தமிழ்நாடு

ஓடும் பேருந்தில் மாரடைப்பு : பணியின்போதே இறந்த நடத்துனர்

ஓடும் பேருந்தில் மாரடைப்பு : பணியின்போதே இறந்த நடத்துனர்

webteam

மதுரையில் ஓடும் பேருந்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு நடத்துனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப்பேருந்து நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் நடத்துனராக இருந்த ஜெயச்சந்திரனுக்கு பேருந்து செல்லும் வழியிலேயே நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவர் மயக்கம் மடைந்துள்ளார். உடனே ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு, நடத்துனரை சோதித்துள்ளார். அவர் மயக்கநிலையில் இருந்ததால், உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

அங்கு ஜெயச்சந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து கொட்டாம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர், ஜெயச்சந்திரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.