தமிழ்நாடு

யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டம்!

jagadeesh

நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் காட்டு யானைக்கு தீ வைத்த சம்பவத்தில் கைது செய்யபட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் மசினக்குடி அருகேயுள்ள மாவநல்லா பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்கும் விடுதிக்குள் நுழைந்த காட்டு யானையின் மீது தீ வைக்கபட்டது. காதில் தீ காயமடைந்த யானை அடுத்த சில தினங்களில் உயிரிழந்தது. இந்த வழக்கு தொடர்பாக விடுதி உரிமையாளர் ரேமன்ட் டீன் மற்றும் மாவநல்லா பகுதியை சேர்ந்த பிரசாந்த் ஆகிய இருவர் கைது செய்யபட்டனர்.

விடுதியின் மற்றொரு உரிமையாளரான ரிக்கி ரயான் தற்போது வரை தலைமறைவாக உள்ளார். கைது செய்யபட்ட இருவரும் குன்னூர் கிளை சிறையில் அடைக்கபட்டுள்ள நிலையில் வழக்கு கூடலூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ரேமண்ட் டீன் மற்றும் பிரசாந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா நேற்று மாலை இருவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். இந்நிலையில் நாளை இருவரும் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்டவுள்ளனர்.