2.15 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் மூலம் டெல்லிக்கு தங்கம் கடத்தப்பட இருப்பதாக சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், அதன் கழிவறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 பண்டல்களை கைப்பற்றினர்.
அவற்றில் 5.6 கிலோ எடைக்கு 48 தங்கக் கட்டிகள் இருந்தன. உள்நாட்டு விமானம் மூலம் டெல்லிக்கு அந்த தங்கக் கட்டிகள் கடத்தப்பட இருந்ததாக விமான நிலைய புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடத்தல்காரர்கள் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.