வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் வீட்டில் 175 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் 48,000 ரூபாயை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் விண்டர்பேட்டை பகுதியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கவுரிநாதன் தனது மனைவி சிவகாமியுடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும், சென்னை தாம்பரத்தில் உள்ள தனது மகள் சங்கீதா வீட்டிற்கு சென்றுள்ளனர். இதையறிந்த மர்ம நபர்கள் சிலர், இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். இதையடுத்து, பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். காலை விடிந்ததும் வீட்டிற்கு வந்த வேலை செய்யும் பெண் வீட்டின் கதவு உடைக்கப்பட்டதை கண்டு உரிமையாளருக்கு தகவல் அளித்தார்.
பின்னர் வீட்டின் உரிமையாளர் கவுரிநாதன் மற்றும் மனைவி சிவகாமி வந்து வீட்டை பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த முதலில் 175 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 48,000 ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. இதையடுத்து கவுரிநாதன் அளித்த புகாரின்பேரில் அரக்கோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.