தங்கம்  முகநூல்
தமிழ்நாடு

ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு இவ்வளவு குறைவா?

முன்னதாக,சென்ற அக்டோபர் 31ஆம் தேதி தங்கம் வரலாறு காணாத உயர்வாக ஒரு சவரன் 59 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

PT WEB

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 720 ரூபாய் குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 90 ரூபாய் விலை குறைந்து 7 ஆயிரத்து 140 ரூபாய்க்கும், ஒரு சவரன் 720 ரூபாய் விலை இறங்கி 57 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களில் தங்கம் சவரனுக்கு ஆயிரத்து 160 ரூபாய் விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் விலை குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டாலர் மதிப்பு ஏற்றத்துடன் காணப்படுவதே தங்கம் விலை குறைய முக்கிய காரணமாக கூறப்படுகிறது. முன்னதாக, சென்ற அக்டோபர் 31ஆம் தேதி தங்கம் வரலாறு காணாத உயர்வாக ஒரு சவரன் 59 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்கப்பட்டது.