கோகுல்ராஜ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள யுவராஜின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து யுவராஜ் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் யுவராஜின் ஜாமீனை ரத்து செய்தது.18 மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.