தமிழ்நாடு

துரோகம் இழைத்துவிட்டார் மதுசூதனன்: கோகுல இந்திரா

துரோகம் இழைத்துவிட்டார் மதுசூதனன்: கோகுல இந்திரா

webteam

கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டார் மதுசூதனன் என கோகுல இந்திரா குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவின் அவைத்தலைவர் பதவியில் இருந்து மதுசூதனன் நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, செங்கோட்டையனை அவைத் தலைவராக நியமித்தது சரியான முடிவு என்றார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை சந்தித்த மதுசூதனன் ‘என் உயிர் உள்ளவரை உங்களோடு இருப்பேன்’ எனக் கூறினார். கட்சியில் அவருக்கு அனைத்து முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது. ஆனால் அதிமுகவை உடைத்துவிட வேண்டும் என நினைக்கும் சில சுயநலக்காரர்களுடன் சேர்ந்து அவர் கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்று கோகுல இந்திரா குற்றம்சாட்டினார்.

மேலும், சசிகலாவிற்கு பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஆதராவாக உள்ளனர். எனவே அவர் தலைமையிலான ஆட்சி கண்டிப்பாக அமையும் என கோகுல இந்திரா கூறினார்.