gokula indira
gokula indira pt web
தமிழ்நாடு

EXCLUSIVE: “அம்மாவே போய்ட்டாங்க... பங்களா இருந்தா என்ன? இல்லன்னா என்ன?”- கோகுல இந்திரா

PT WEB

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் உடன் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். இந்நிலையில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திராவை புதிய தலைமுறையின் நேர்காணலுக்காக சந்தித்தோம்.

சந்திப்பில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அவர். குறிப்பாக, “கொடநாடு சம்பவம் ஜெயலலிதா மறைந்த பின் அதிமுக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் நடந்தது. ஓபிஎஸ் அப்போதே, ‘எனக்கு அமைச்சர் பதவியோ துணை முதலமைச்சர் பதவியோ வேண்டாம். கொடநாட்டில் என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’ என்றிருக்க வேண்டும். அப்போது கேள்வி கேட்காமல் அமைதியாக இருந்துவிட்டு இப்போது கரெண்ட் ஆஃப் ஆகிவிட்டது என சொல்கிறார்.

கொநாட்டில் யார் அம்மாவுடன் இருந்தார் என்பது மக்கள் எல்லோருக்கும் தெரியும். அம்மா அழைத்தால் அமைச்சர்களோ கட்சி நிர்வாகிகளோ அலுவலகத்திற்குத்தான் சென்று பார்த்துவிட்டு வருவார்கள். அவ்வளவு தான். இப்போது அம்மாவே இல்லை. கொடநாடு பங்களா இருந்தால் என்ன? இல்லை என்றால் என்ன?

ஆறுமுகசாமி ஆணையத்தால் வழங்கப்பட்ட அறிக்கையின்படி ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதா? அவரை ஏன் மேல் சிகிச்சைக்கு அனுப்பவில்லை? அவரை காப்பாற்ற ஏன் முயற்சி எடுக்கவில்லை? அவரை அன்றைய பொறுப்பு முதலமைச்சர் கூட பார்க்க முடியவில்லை. அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் கூட பார்க்க முடியவில்லை. அப்போது ‘அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது அதை தெளிவுபடுத்த வேண்டும்’ என சொல்லிவிட்டு, இன்று அம்மாவையே மறந்துவிட்டு ‘பங்களாவிற்கு போனேன், அங்கு மரணம் நடந்தது அதைப் பற்று விசாரிக்க வேண்டும்’ என கூறிக்கொண்டுள்ளார்” என்றார்.

செய்தியில் உள்ள காணொளியில் முழு நேர்காணலும் உள்ளது.