ரேக்ளா வண்டி மோதி திமுக மாநில நிர்வாகி காயம் pt desk
தமிழ்நாடு

கோபி | கூட்டத்தில் மோதிய ரேக்ளா குதிரை.. சாலையோரம் நின்றிருந்த திமுக நிர்வாகிக்கு நேர்ந்த சோகம்!

கோபிசெட்டிபாளையம் அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தையத்தை தொடங்கி வைத்தபோது, ரேக்ளா வண்டி மோதியதில் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிசந்திரன் காயமடைந்தார். இதன் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

PT WEB

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் டி.என்.பாளையம் ஒன்றிய திமுக சார்பில் ரேக்ளா பந்தயம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை திமுக மாவட்ட செயலாளர் நல்லசிவம், திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிசந்திரன் ஆகியோர் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது போட்டியில் கலந்து கொண்ட ரேக்ளா வண்டிகள் சீறி பாய்ந்தன.

ரேக்ளா வண்டி மோதி திமுக மாநில நிர்வாகி காயம்

அப்போது எதிர்பாராதவிதமாக போட்டியில் கலந்து கொண்ட ஒரு ரேக்ளா வண்டி சாலையோரம் நின்றிருந்த திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிசந்திரன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைகாக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரேக்ளா வண்டி மோதி திமுக பொறுப்பாளர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரேக்ளா வண்டி மோதும் பரபரப்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.