தமிழ்நாடு

போச்சம்பள்ளி சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

webteam

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மீன், இறைச்சி சாப்பிடாமல் கடவுளை வழிபடும் வழக்கம் மக்களிடம் இருந்துவருகிறது. தற்போது புரட்டாசி முடிவடைந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஆட்டுச்சந்தையில் சுமார் ஒரு கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றது.

கொரோனா காரணமாக கடந்த 6 மாதமாக மூடப்பட்டிருந்த போச்சம்பள்ளி வாரச் சந்தை இரண்டு வாரங்களுக்கு முன் திறக்கப்பட்டது. புரட்டாசி மாதம் முடிவடைந்ததால் அசைவப் பிரியர்கள் ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழிகளை வாங்க சந்தைக்கு அதிக அளவு வருகைதந்தனர்.

சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.