தமிழ்நாடு

ரம்ஜான்: ஒரே நாளில் 25 ஆயிரம் ஆடுகள் விற்பனை!

ரம்ஜான்: ஒரே நாளில் 25 ஆயிரம் ஆடுகள் விற்பனை!

webteam

ரம்ஜான் பண்டிகையையொட்டி, செஞ்சி வாரச்சந்தையில் ஒரே நாளில் சுமார் 25 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆட்டுச் சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு செஞ்சியை சுற்றியுள்ள கடலூர், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்வார்கள். வருகிற 26-ம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதால் செஞ்சியில் இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. ஒவ்வொரு ஆடும் அதன் தரத்திற்கேற்ப ரூ.7 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விலைபோனது. 
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக அளவில் வியாபாரிகள் வந்தனர். இன்று ஒரே நாளில் சுமார் 25 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகி உள்ளது’ என்றனர்.