தமிழ்நாடு

"மூன்று சக்கர வாகனம் கொடுங்க" - மனு கொடுத்த மூதாட்டிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆட்சியர்!

webteam

மூன்று சக்கர சைக்கிள் கேட்டு மனு அளித்த அடுத்த கனமே மூதாட்டியை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார் விழுப்புரம் மாவட்ட ஆட்சிர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் மாதாந்திர ஊக்கத்தொகை தொழிற்கடன் மாற்றுத் திறனாளி உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

அப்போது மாற்றுத்திறனாளி உதவித் தொகைக்காக விண்ணப்பிக்க வந்த ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற மூதாட்டி, மாவட்ட ஆட்சியரிடம் மாற்று திறனாளி உதவிதொகை மற்றும் மூன்று சக்கர வாகனம் வழங்க வலியுறுத்தி மனு அளித்தார். மூன்று சக்கர வாகனம் வழங்க வலியுறுத்தி மனு அளித்த மூதாட்டியின் கோரிக்கையை ஏற்ற ஆட்சியர் மோகன். உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து புதிய மூன்று சக்கர வாகனம் மாற்று திறனாளி துறை அதிகாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு மூதாட்டியை மூன்று சக்கர வாகனத்தை வழங்கி ஓட்டச் சொன்னார். மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தவுடன் மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்ட சம்பவம் மாற்றுத் திறனாளிகளுக்கு மன நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.