தமிழ்நாடு

மசாஜ் சென்டரில் பணியாற்றிய வடமாநில இளம்பெண் மர்ம மரணம்...!

மசாஜ் சென்டரில் பணியாற்றிய வடமாநில இளம்பெண் மர்ம மரணம்...!

webteam

ஸ்ரீபெரும்புதுார் அருகே, மசாஜ் சென்டரில் வேலைப்பார்த்து வந்த வடமாநில இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்த 22 வயதான இளம்பெண் சுங் சூய் மொய். இவர் ஸ்ரீபெரும்புதுார் அருகே தண்டலம் ஊராட்சி செட்டிபேடு கிராமத்தில் வாடகை வீடு எடுத்து தங்கியிருந்தார். மேலும், அதே பகுதி தனியார் மசாஜ் சென்டர் ஒன்றில் வேலைப்பார்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று சக பெண் பணியாளர்களுடன் தான் வசிக்கும் வீட்டில் உறங்கியுள்ளார். இதையடுத்து இன்று காலை படுத்திருந்த சுங் சூய் மொயை சக தோழிகள் எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சென்ற ஸ்ரீபெரும்புதுார் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இறந்த பெண்ணுக்கு சுவாச கோளாறு பிரச்னை இருந்துள்ளது எனவும் அதனால், மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர். இருந்தாலும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.