தமிழ்நாடு

காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு கொடுத்ததால் மாணவி தற்கொலை

காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு கொடுத்ததால் மாணவி தற்கொலை

webteam

திருப்பூரில் இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவிக்கு கொடுத்த காதல் தொந்தரவால் மன உளைச்சல் ஏற்பட்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் பிச்சாபாளையம் பகுதியை சேர்ந்த கீர்த்தனா என்பவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இளநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது காங்கயம் பகுதியை சேர்ந்த முகமது தாகீர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை விட்டு விலகியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் முகமது தாகீர் கல்லூரிக்கு சென்று கீர்த்தனாவை அவரது நண்பர்கள் மத்தியில் தவறாக பேசியும், தன்னை காதலிக்குமாறு தொலைபேசியில் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு மாணவி கீர்த்தனா திருப்பூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளின் தற்கொலைக்கு காரணமான முகமது தாகீரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீர்த்தனாவின் தந்தை கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.