தமிழ்நாடு

2004 சுனாமியில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை - ராதாகிருஷ்ணன் தலைமையில் திருமணம்

Sinekadhara

சுனாமி பேரலையில் இருந்து மீட்கப்பட்டு சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் அரவணைப்பில் வளர்ந்த சவுமியாவிற்கு நாகையில் திருமணம் நடைபெற்றது.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையில் மீட்கப்பட்டு அரசால் தொடங்கப்பட்ட அன்னை சத்யா இல்லத்தில் வளர்ந்த 9 மாத குழந்தை சவுமியா மற்றும் 3 மாத குழந்தை மீனா ஆகிய இருவரையும் அப்போது நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார். சென்னைக்கு பணி மாறுதலில் சென்றாலும், மாதந்தோறும் நாகை வந்து குழந்தைகளோடு நேரம் செலவிட்டு அவர்களின் கல்வி மற்றும் வளர்ச்சியில் பங்களிப்பை செலுத்தி வந்தார்

சவுமியா மற்றும் மீனா ஆகிய இருவரும் 18 வயதை கடந்த நிலையில், நாகையைச் சேர்ந்த மலர்விழி, மணிவண்ணன் தம்பதியர் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில், ராதாகிருஷ்ணன் தலைமையில் சவுமியாவிற்கு திருமணம் நடைபெற்றது. இதில், நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.