தமிழ்நாடு

ஆசிரம் அருகே அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை - மருத்துவமனையில் சிகிச்சை!

webteam

உளுந்தூர்பேட்டை சங்கரலிங்க சுவாமி ஆசிரமத்தின் அருகில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அனாதையாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டைத்தில் உள்ள ஆசிரம் ஒன்றின் அருகே பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது பிறந்து பத்து நாட்கள் ஆன பச்சிளம் பெண் குழந்தை அனாதையாக கிடந்தது. குழந்தையை சுற்றி எறும்புகள் மொய்த்து கொண்டிருந்தன. 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் குழந்தையை தூக்கி, எறும்பு மற்றும் தூசிகளை சுத்தம் செய்தனர். மேலும் உளுந்தூர்பேட்டை (Child டine) சைல்டு லைன்  அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த சைல்டு லைன் அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் பச்சிளம் குழந்தையை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

குழந்தைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பச்சிளம் குழந்தையை அனாதையாக விட்டுச்சென்ற தாயை சைல்டு லைன் அதிகாரிகள் தேடி வருகின்றனர். இதனால் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.