தமிழ்நாடு

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

jagadeesh

பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் கோயிலில் பக்தர்கள் கிரிவலம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இன்றும் நாளையும் அருணாச்சலேஸ்வர் கோயிலில் கிரிவலம் செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். எனவே பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.