தமிழ்நாடு

இளைஞர்களுக்கு வேளாண் துறையில் வேலைவாய்ப்பு: கிரிராஜ் சிங்

இளைஞர்களுக்கு வேளாண் துறையில் வேலைவாய்ப்பு: கிரிராஜ் சிங்

Rasus

வேளாண்மைத் துறையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்று மத்‌திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் உபாசி அரங்கில் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க 124-வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருதுகளை வழங்கினார். அதன் பின்னர் பேசிய அவர், வேளாண்மையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் பயன்பாட்டால் நிலம் மலடாக மாறியுள்ளது. இதனால், விவசாயிகள் ரசாயன உரங்கள் பயன்பாட்டை தவிர்த்து, இயற்கை வேளாண்மைக்கு மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வேளாண்மையில் தண்ணீர் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும், தண்ணீர் அறுவடை திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். நமது நாட்டில் அதிக இளைஞர்கள் உள்ளனர் என்பதால், அவர்களுக்கு வேளாண்மைத்துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.