தமிழ்நாடு

அம்மாடி... எத்ததண்டி: விவசாய நிலத்தில் கிடந்த ராட்சத மலைப்பாம்பு - வனத்துறை அறிவுரை

webteam

கூடலூர் அருகே விவசாய நிலத்தில் கிடந்த சுமார் 15 அடி நீள ராட்சத மலைப்பாம்பை மீட்ட வனத்துறையினர் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அல்லூர்வயல் பகுதியில் உள்ள தனியார் ஏலம் தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று கிடப்பதை தொழிலாளர்கள் பார்த்துள்ளனர். இது குறித்து கூடலூர் வனத் துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற வனத் துறையினர் மலைப்பாம்பை பத்திரமாக பிடித்தனர்.

இதையடுத்து பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு சுமார் 15 அடி நீளம் கொண்ட ராட்சத பாம்பாக இருந்தது. மீட்கப்பட்ட மலைபாம்பு கூடலூர் அருகே உள்ள அடர் வனப் பகுதிக்குள் பாதுகாப்பாக விடப்பட்டது. சமீப காலமாக விவசாய நிலங்களுக்குள் மலைப் பாம்புகள் வருவது அதிகரித்துள்ள நிலையில், அவற்றை தொந்தரவு செய்யாமல் வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.