தமிழ்நாடு

கத்தியை காட்டி ஜெர்மன் பெண் பலாத்காரம்

கத்தியை காட்டி ஜெர்மன் பெண் பலாத்காரம்

webteam

மாமல்லபுரத்தில் ஜெர்மன் பெண் ஒருவர், கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்துக்கு ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஜெர்மனைச் சேர்ந்த 5 பேர் சனிக்கிழமை மாமல்லபுரம் வந்தனர். அங்குள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். அந்தச் சுற்றுலா பயணிகளில் ஒருவரான இளம் பெண், நேற்று காலை பீச்சில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர், கத்தியை காட்டி மிரட்டி, அவரை அருகில் உள்ள சவுக்குத் தோப்புக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மாமல்லபுரம் போலீசில் புகார் கொடுத்தார். ஜெர்மன் தூதரகத்துக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார், நான்கு தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரிடம் விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.