தள்ளாடும் வயதிலும் வாக்களிக்க வந்த மூதாட்டிகள்
தள்ளாடும் வயதிலும் வாக்களிக்க வந்த மூதாட்டிகள் pt desk
தமிழ்நாடு

தள்ளாடும் வயதிலும் தடி ஊன்றிவந்த மூதாட்டிகள்.. ஜனநாயக கடமையை நிறைவேற்றி அசத்தல்!

webteam

செய்தியாளர்கள்: பிரவீண், ரமேஷ்

தமிழ்நாட்டில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய ஜனநாயக தேர்தல் திருவிழா விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில், முத்தாயம்மாள் என்ற 100 வயது மூதாட்டி தனது உறவினர்கள் உதவியோடு பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுகுணாபுரம் வாக்குச் சாவடிக்கு வந்தார்.

வாக்களிக்க வந்த மூதாட்டி

இதையடுத்து தனது வாக்கை செலுத்தி விட்டு வெளியே வந்த மூதாட்டி, “இதுவரை நான் வாக்களிக்கத் தவறியதே இல்லை. இந்த முறையும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தேன்” எனக் கூறினார். நடக்க முடியாத வயதிலும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்த மூதாட்டி, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.

அதேபோல் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள ராமலிங்கம்பட்டியை சேர்ந்தவர் சின்னம்மாள் (102). இவர் தள்ளாடும் வயதிலும் குச்சியை ஊன்றி வாக்குச் சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையை செய்துள்ளார்.

வயது முதிர்ந்தவர்களும் உடல்நல சிக்கல் இருப்பவர்களும் அதிகாரிகளை தொடர்புகொண்டு அவர்கள் ஏற்படுத்தி தரும் வாகன வசதிகள் மூலம் வாக்குச்சாவடி மையத்துக்கு செல்லவும், மாலை 3 அல்லது 4 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் குறைந்தபின் வாக்கு செலுத்த செல்லவும் அதிகாரிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் நேரத்தில் வாக்களிக்க செல்வதை, முதியோர் மற்றும் உடல்நல சிக்கல் இருப்போர் தவிர்க்கவும்.