gem veeramani - p shanmugam video screenshot / cpim
தமிழ்நாடு

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு| திமுக ஆட்சியில் ஏன் சரியாக விசாரிக்கவில்லை? - பெ.சண்முகம் கேள்வி

ஜெம் வீரமணி போக்சோ வழக்கை திமுக ஆட்சியில் ஏன் சரியாக விசாரிக்கவில்லை என சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Rishan Vengai

இந்த வழக்கை திமுக ஆட்சியில் ஏன் சரியாக விசாரிக்கவில்லை என்று சிபிஎம் தலைவர் பெ. சண்முகம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார். ஜெம் வீரமணி வழக்கு கடந்த ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் முறையாக முன்னேறவில்லை; அரசு கட்டாயத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கிறது என அவர் குற்றம்சாட்டினார்.

சென்னையைச் சேர்ந்த கிரானைட் தொழிலதிபர் ஆர். வீரமணி மீதான பாலியல் வழக்கு இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக எழுந்த புகாரையடுத்து வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி வீரமணி, அவரது தொடர்புடைய மகேந்திர சிம்மன் மற்றும் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வீரமணியின் நிறுவனத்தில் சுமார் 23 ஆண்டுகள் பணியாற்றியதாகக் கூறப்படும் கணேசன் என்பவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

POCSO case against Gem Veeramani to the CBI

இந்தசூழலில் கடந்த காலங்களில் இந்த வழக்கை மூடி மறைப்பதற்காக கோடிக்கணக்கான ரூபாய் பெறப்பட்டதாக தகவல் வெளியானதன் அடிப்படையில், கடந்த 2024 ஆம் ஆண்டு சென்னை காவலர் ஆணையராக இருந்த அருண், கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் 5 காவல்துறை அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வழக்கை திமுக ஏன் சரியாக விசாரிக்கவில்லை என சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெம் வீரமணி மீது கடந்த ஆட்சியில் வழக்கு தொடர்ந்தும் ஏன் சரியாக விசாரிக்கவில்லை. தீமுக தலைவர் இதை சுலபமாக சொல்லிவிட முடியாது; அவர் ஆட்சியில் முறையாக விசாரிக்கவில்லை. இப்போது இருக்கக்கூடிய தமிழ்நாடு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கூடிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தவெகவைச் சார்ந்தவர்கள் எதோ தானாகவே இந்த வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இந்த பிரச்னை இவ்வளவு பேசப்படுவதற்கும், கைது நடவடிக்கைக்கும் காரணம் போக்சோ நீதிமன்றத்தின் நீதிபதி தான். ஜெம் வீரமணி விவகாரம் அரசால் வெளிவரவில்லை. பல நாட்கள் பரபரப்பாக பேசப்படுவது. பின்னர் கிடப்பில் போடுவதுபோல் இவ்வழக்கு இருக்கக்கூடாது” என பேசியுள்ளார்.