POCSO case against Gem Veeramani to the CBI ANI
தமிழ்நாடு

ஜெம் வீரமணி வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்! 18 சிறுமிகள் பாதிக்கப்பட்டது விசாரணையில் அம்பலம்!

ஜெம் வீரமணி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யட்டதில் 18 சிறுமிகள் பாதிக்கபட்டதாக தெரியவந்துள்ளது.

PT WEB

ஜெம் வீரமணி வழக்கில் 18 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. காவல் துறை தலைமறைவாக உள்ள பிரகாஷை பிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது.

ஜெம் வீரமணி மீதான மேலும் ஒரு வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வீரமணியால் இதுவரை 18 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக, நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்குகளில், தலைமறைவாக உள்ள பிரகாஷை பிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறக்கப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் காவல் துறை கூறியுள்ளது.

ஜெம் வீரமணி

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளது. ஜெம் வீரமணி உள்பட 10 பேர் மீது இதுவரை 9 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.