நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவனை விமர்சித்த விவகாரத்தில், பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராகும்படி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
2019ஆம் ஆண்டு திருமாவளவன் இந்து கோயில்களின் வடிவமைப்பு குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் திருமாவளவனை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நடிகை காயத்ரி ரகுராமுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.