தமிழ்நாடு

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.50 உயர்வு!

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.50 உயர்வு!

Sinekadhara

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை(மானியமில்லாதது) மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே டிசம்பர் 1ல் சமையல் சிலிண்டர் விலை ரூ. 610லிருந்து ரூ.660ஆக உயர்த்தப்பட்டிருந்தது. எண்ணெய் நிறுவனங்களின் நடவடிக்கையால் கேஸ் சிலிண்டரின் விலை தற்போது ரூ.710-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

15 நாட்களில் சமையல் சிலிண்டரின் விலை ரூ.100 அதிகரித்ததால், நடுத்தர மக்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முன்பதிவு செய்யும்போது பழைய விலையாக இருந்தாலும் புதிய விலைக்கே சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது அதன்விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.