தமிழ்நாடு

தொடர் மழையால்‌ பூண்டு விளைச்சல் பாதிப்பு

rajakannan

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூண்டி, கீழவரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழை பெய்ததால் பூண்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகை, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. நாகையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர் நீரில் மூழ்கி நாசமானது.

இந்நிலையில், கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூண்டி, கீழவரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழை பெய்ததால் பூண்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டிருந்த பூண்டு அழுகியுள்ளதால், மகசூல் குறைந்ததாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மூன்று மடங்கு இருக்க வேண்டிய பூண்டு விளைச்சல் 2 மடங்காக குறைந்து விட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.