ஓட்டுக்கு பணம் தருபவர்கள், வாக்காளர்களை நாய்களாக பார்க்கிறார்கள் என்று பாஜக வேட்பாளர் கங்கை அமரன் சாடியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கவும், தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் தேவையான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இருந்தும் பணப் பட்டுவாடா தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன், ’ஓட்டுக்கு பணம் தருவோர் வாக்காளர்களை நாய்களாகவும், வேலைக்காரர்களாகவும் பார்க்கின்றனர். ஓட்டுக்கு பணம் வழங்கினால் வாக்காளர்கள் சொல்வதை கேட்பார்கள் என அவர்கள் நம்புகிறார்கள், தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும்’என கூறியுள்ளார்.