தமிழ்நாடு

ரஜினியிடம் வாழ்த்துப் பெற்றார் கங்கை அமரன்

ரஜினியிடம் வாழ்த்துப் பெற்றார் கங்கை அமரன்

webteam

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் இசையமைப்பாளர் கங்கை அமரன், ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், பாஜக சார்பில் வேட்பாளராக கங்கை அமரன் அறிவிக்கப்பட்டுள்ளார். முதன்முறையாகத் தேர்தலில் களமிறங்கியுள்ள கங்கை அமரன், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறுநாள் முதலே தொகுதிச் சென்று தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ரஜினியை நேரில் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.