ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளராக இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக சார்பில் டிடிவி தினகரன், திமுக தரப்பில் மருது கணேஷ், ஓபிஎஸ் அணி தரப்பில் மதுசூதனன், தேமுதிகவில் மதிவாணன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். பாஜக வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் இருந்தது. பாஜக சார்பில் கங்கை அமரன் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று தகவல் வெளியாகியது. இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக கங்கை அமரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பாஜகவின் தேர்தல் குழு தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.