காந்திஜெயந்தியையொட்டி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மகாத்மா காந்தி கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
நாடு முழுவதும் காந்தியின் 148-வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் ஈரோடு மாவட்டம் செந்தாம்பாளையத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. வையாபுரி என்பவர் காந்தியின் மீது கொண்ட பற்று காரணமாக 1997ஆம் ஆண்டு மகாத்மா காந்திக்கும் கஸ்தூரிபாய் அம்மையாருக்கும் கோயில் கட்டினார். இக்கோயிலில் இன்று காந்தியின் சிலைக்கும் அன்னை கஸ்தூரிபாய் சிலைக்கும் பால், தயிர், இளநீர் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.