தமிழ்நாடு

காந்தி ஜெயந்தி புதிர் போட்டி - தமிழ் புறக்கணிப்பு?

காந்தி ஜெயந்தி புதிர் போட்டி - தமிழ் புறக்கணிப்பு?

Veeramani

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் புதிர் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.

காந்தி பிறந்தநாளை முன்னிட்டு 3 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த போட்டி புதிர் போட்டி நடத்தப்படுகிறது. மத்திய கல்வித் துறை இணைந்து தேசிய கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த போட்டியை நடத்துகிறது.

தமிழக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இப்போட்டி குறித்த சுற்றறிக்கையை, அரசுப் பள்ளி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ளனர். இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் உள்ள வினாக்களை நாளை காலை 10 மணி முதல் செயலி மூலம் பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமே அறிந்த மாணவர்கள் இப்போட்டியில் எப்படி கலந்துகொள்ள முடியும் என்ற கேள்வியை கல்வியாளர்கள் எழுப்பியுள்ளனர்.