தமிழ்நாடு

சீர்காழியில் கெயில் குழாய் பதிப்பு பணியில் தீ விபத்து !

webteam

சீர்காழி அருகே கெயில் குழாய் பதிக்கும் பணியின் போது உயர் அழுத்த காற்று இயந்திரம் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையபாளையத்தில் இருந்து மேமாத்தூர் வரை 29 கி.மீ தூரம் கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகிலேயும் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி குழாய் பதிக்கும் பணிகள் 90% முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் இன்று சீர்காழி அருகே நாங்கூரில் கெயில் நிறுவனம் குழாய்களை சோதனை செய்யும் பணியை துவங்கியது. இதற்காக உயர் அழுத்த காற்று செலுத்தும் ராட்சத கம்ப்ரசர் இயந்திரத்தின் மூலம் குழாயில் காற்றை செலுத்தினர். அப்போது அழுத்தம் தாங்காமல் ராட்சத கம்ப்ரசர் வாகனம் வெடித்து தீ பிடித்து எரிய தொடங்கியது.

தீயை அணைக்க ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால் தியணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த மேலையூர் தீயனைப்பு துறை வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இத்தீவிபத்தால் அப்பகுதி பொது மகக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.