தமிழகம் முழுவதும் இன்று முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது போல. இந்த மாதமும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட இருக்கிறது.
இதனையடுத்து இந்த மாதத்தின் முதல் முழு பொது முடக்கம் அமலுக்கு வந்தது. கொரோனா பாதிப்பினால் இதுவரை 6 கட்ட ஊரடங்குகள் அமலில் இருந்த நிலையில் தற்போது 7 ஆம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அமலுக்கு வந்தது. கடந்த முறை அறிவிக்கப்பட்ட அதே தளர்வுகளும் கட்டுபாடுகளும் இந்த முறையும் தொடர்கின்றன. சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள் மட்டுமே இயங்கும். மற்ற காய்கறி, மளிகை, கறிக்கடை, டாஸ்மாக் ஆகியவை மூடப்பட்டிருக்கும். பொது மக்கள் அனாவசியமாக வெளியே சுற்ற தடை விதிக்கப்பட்டு, மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க போலீஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.