தமிழ்நாடு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு பொதுமுடக்கம் : தமிழக அரசு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு பொதுமுடக்கம் : தமிழக அரசு

webteam

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ்கள் ஆகியவை வழக்கம்போல செயல்படலாம். உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். கொரோனா பரவலை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.