நீலகிரி மாவட்டத்தில் டமிட்டா பழம் என்று அழைக்கப்படும் மரத் தக்காளிப் பழ சீசன் தொடங்கியுள்ளது. மருத்துவ குணமிக்கது என்பதால் பொதுமக்கள் இதனை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தட்ப வெப்பநிலைக்கு ஏற்றவாறு பல வகையான பழங்கள் விளைகின்றன. துரியன்பழம், மங்குஸ்தான், முள்சீத்தா பழ வரிசையில் டமிட்டா பழமும் முக்கிய இடம் பெறுகிறது. இந்த பழம் காயாக இருக்கும் போது, அதனை அரைத்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம், சர்கரை அளவுகள் கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நீலகிரியில் தற்போது டமிட்டா பழம் சீசன் தொடங்கியுள்ளது. சீசன் நேரம் என்பதால் மற்ற காலங்களில் கிடைப்பதை விட தற்போது குறைந்த விலையில் இப்பழம் கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் டமிட்டா பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.