தமிழ்நாடு

பழங்கள் விளைச்சல் அதிகரிப்பு: ஜாம் தயாரிக்கும் பணி தீவிரம்

பழங்கள் விளைச்சல் அதிகரிப்பு: ஜாம் தயாரிக்கும் பணி தீவிரம்

webteam


குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் பழங்களின் வரத்து அதிகரிப்பால் ஜாம் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. 

சிம்ஸ் பூங்கா அருகிலுள்ள தோட்டக்கலை பழப் பண்ணையில் பப்பாளி, ஆப்பிள், மாதுளை, பீச், ப்ளம் உள்ளிட்ட பழவகைகளின் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்‌றன. தற்போது இவ்வகை பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், பதப்படுத்த முடியாத சூழல் இருப்பதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்‌. எனவே பழங்களை அ‌றுவடை செய்து ஜாம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இவ்வகை ஜாம்களுக்கு சுற்றுலாப் பயணிகளிடம் வரவேற்பு உள்ளதாகக் தெரிவித்தனர்.