ஒன்றிய பட்ஜெட் புதியதலைமுறை
தமிழ்நாடு

சண்முகம் செட்டியார் முதல் நிர்மலா சீதாராமன் வரை | மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழர்கள்!

கணக்கு வழக்குகளை கையாள்வதில் தமிழர்கள் கெட்டிக்காரர்கள் என்பது மத்திய பட்ஜெட்டை அவர்கள் தாக்கல் செய்த விதமே உறுதிப்படுத்துகிறது.

PT WEB

மத்தியில் யார் ஆண்டாலும் வலுவான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்ததில்பெரும் பங்கு தமிழர்களையே சேரும்.

அந்த வகையில், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்கள் யார் யார்? என தெரிந்துகொள்ளலாமா...

கணக்கு வழக்குகளை கையாள்வதில் தமிழர்கள் கெட்டிக்காரர்கள் என்பது மத்திய பட்ஜெட்டை அவர்கள் தாக்கல்
செய்த விதமே உறுதிப்படுத்துகிறது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபின் நாட்டின் முதல் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தவர்யார் தெரியுமா?... ஒரு தமிழர்தான். ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் இடம்பெற்ற சண்முகம் செட்டியார் தான்இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.அப்போது பிரதமராக இருந்த நேருவிடம் சண்முகம் செட்டியாரை நிதியமைச்சராக நியமனம் செய்ய பரிந்துரைத்தது யார் தெரியுமா?... மகாத்மா காந்திதான்.

1957,1958, 1964, 1965 ஆகிய ஆண்டுகளிலும் தமிழரான கிருஷ்ணமாச்சாரிதான் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
வரி தொடர்பான சீர்திருத்தங்கள் இவரது பட்ஜெட்டில்தான்
அறிமுகப்படுத்தப்பட்டன.

ப.சிதம்பரம்

இந்திரா காந்தி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தமிழரான பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியம் 1975ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். 1980ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இந்திரா காந்தி வெற்றிபெற்ற நிலையில், தஞ்சையைச் சேர்ந்த வெங்கட்ராமனை நிதியமைச்சராக நியமனம் செய்தார். இவர், 1980 மற்றும் 81ஆம்
ஆண்டுகளில் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டின் சிவகங்கையைச் சேர்ந்த ப.சிதம்பரம் 1997ஆம் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்று தாக்கல் செய்த பட்ஜெட் இன்றுவரை கனவு பட்ஜெட் என அழைக்கப்படுகிறது. பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்த இந்த பட்ஜெட்டில் தொழில் நிறுவனங்களுக்கான வரி கணிசமாக
குறைக்கப்பட்டன. 

ப. சிதம்பரம் 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த நிதியமைச்சர்கள் பட்டியலில் மொரார்ஜி தேசாய்க்கு அடுத்த இடத்தை சிதம்பரம் சிறப்பிக்கிறார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தற்போது பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில்
நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன், 8ஆவது முறையாக ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை, பணப்புழக்கத்தை அதிகரிப்பது உள்ளிட்டவைகள் இவர் முன் உள்ள சவால்கள்.

2025-26ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிர்மலா சீதாராமன், இதற்கு ஏற்ப அறிவிப்புகளை
வெளியிடுவாரா? என்பது பலதரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.