சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு; ஒரு கிராம் தங்கம் 11ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை.
அனந்தபுரி, உழவன் உள்ளிட்ட விரைவு ரயில்கள் நாளை முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம்; சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் தெற்கு ரயில்வே அறிவிப்பு.
மத்திய பிரதேசத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவை காகிதத்தில் வைத்து வழங்கிய வீடியோவை பார்த்து, இதயம் உடைந்து போனேன். பாஜக அரசின் வளர்ச்சி என்பது வெறும் மாயை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்.
பிஹார் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரம்.
பிஹார் முதல் கட்டத்தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக இறுதி புள்ளிவிவரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம். வரலாறு காணாத வாக்குப்பதிவு என விளக்கம்.
வரலாறு தெரியாதவர்கள் திமுகவை மிரட்டிப்பார்க்க நினைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். கட்சி தொடங்கியவுடன் அடுத்த முதல்வர் என அறிவிக்காமல், களப்பணியாற்றியவர்கள் திமுகவினர் எனவும் பெருமிதம்.
கோடநாடு விவகாரத்தில் என்ன பூச்சாண்டி காட்டினாலும் பயப்படமாட்டேன் என எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு. துரோகிகள் வேண்டுமேன்றே திட்டமிட்டு பேசி வருவதாக விமர்சனம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி நாகேந்திரன் இறக்கவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புகார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அரசு தப்ப வைத்துவிட்டதாக ஆம்ஸ்ட்ராங் சகோதரர் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு.
டிசம்பர் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்... நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையேயான 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி. பொறுமையை சோதிக்க வேண்டாம் என ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை...
சாதாரண பட்டன் ஃபோன் மூலம் யுபிஐ பணப்பரிமாற்ற வசதி. அறிமுகம் செய்ய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டம்...
உக்ரைன் எரிசக்தி நிலையங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்... முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது துருக்கி... காஸாவில் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக கூறி நடவடிக்கை...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி. கடைசி ஆட்டம் மழையால் ரத்து.
உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ரவீந்தர் சிங் தங்கம் வென்று அசத்தல். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றார் இளவேனில் வாலறிவன்.