தமிழ்நாடு

திருவள்ளூரில் கடந்த 7 மாதங்களில் 55 பேருக்கு டெங்கு - ஆட்சியர் தகவல்

திருவள்ளூரில் கடந்த 7 மாதங்களில் 55 பேருக்கு டெங்கு - ஆட்சியர் தகவல்

webteam

திருவள்ளூரில் கடந்த 7 மாதங்களில் 55 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக அம்மாவட்ட பொறுப்பு ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் செங்கரை ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு ஆட்சியர் முத்து கலந்து கொண்டு கிராம மக்களுக்கு, நிலவேம்பு கஷாயம் வழங்கினார். டெங்கு பாதிக்கப்பட்டால், அவற்றிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்ளுதல், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் அரசு மருத்துவமனையை அணுகுமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 55 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 42 பேருக்கு சரி செய்யப்பட்ட நிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் 3 பேர் டெங்கு அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான மருந்து மாத்திரைகள் கையிருப்பு உள்ளதாகவும், கொசுப்புழுக்களை அழிக்க தொடர்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.