தமிழ்நாடு

மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச வைஃபை எப்போது?

மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச வைஃபை எப்போது?

webteam

மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வழங்க தேவையான பணிகளை தொடங்கியுள்ளது சென்னை மெட்ரோ நிர்வாகம்.

இலவச வைஃபை வசதி குறித்து மெட்ரோ நிர்வாகம், மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வழங்க தேவையான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அடுத்த ஆண்டில் மெட்ரோ ரயில்களிலும் இலவச வைஃபை வசதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சேவையை முதலில் மேல்தளங்களிலுள்ள‌ மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன்பின்னர் சுரங்க ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

வைஃபை வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், ஆரம்பகால கட்டத்தில் இலவச சேவை வழங்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.