தமிழ்நாடு

இலவச லேப்டாப் எப்போது வழங்கப்படும் ? : அமைச்சர் பதில்

இலவச லேப்டாப் எப்போது வழங்கப்படும் ? : அமைச்சர் பதில்

webteam

அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிலுவையில் உள்ள மிதி வண்டி மற்றும் மடி கணினிகள் மிக விரைவில் வழங்கப்படும் என ஆவடி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். சென்னை ஆவடி தொகுதிக்கு உட்பட்ட முத்தாபுதுபோட்டை,  கோவில்பதாகை, தண்டுரை,திருமுல்லைவாயல்,விளிஞ்சியம்பாக்கம்,பருத்திப்பட்டு கிராமங்களை சார்ந்த 740 நபர்களுக்கு வீட்டு மனை  பட்டா வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் , திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி,  உள்ளிட்டோர்  கலந்து கொண்டு அப்பகுதி மக்களுக்கு பட்டாக்களை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், தூத்துகுடி பிரச்சனையில் சிபிஐ விசாரணை வேண்டும் என்ற நீதிமன்றத்தின் கருத்திற்கு பதில் அளிக்க மறுத்த அமைச்சர், ஆவடி தொகுதியை போல திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மிக விரைவில் இலவச பட்டா அளிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஆவடி தொகுதியில் மாதம் ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்படும் என்றார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள இலவச சைக்கிள் மற்றும் இலவச மடிக்கனிணி ஆகியவை உடனடியாக வழங்கப்படும் என தெரிவித்தார்.