தமிழ்நாடு

வேலை மோசடி வழக்கு - செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

வேலை மோசடி வழக்கு - செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

webteam

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ₹ 2.80 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பான வழக்கில் இருந்து திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜியை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

2011 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது அவர் பெயரை சொல்லி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பல்வேறு குற்றாச்சாட்டுகள் எழுந்தது.

4 கோடியே 32 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் அளித்த புகாரில் மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் செந்தில்பாலாஜி, பிரபு, சகாயராஜன், அன்னராஜ், ஆகிய நால்வர் மீதும் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில்பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அவரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் வழக்கிலிருந்து அவரை விடுவிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.