தென் இந்தியாவின் பிரசித்தி பெற்ற இடங்களை சைக்கிள் மூலம் பிரான்ஸ் நாட்டினர் சுற்றி பார்த்து வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து 11 பேர் கொண்ட குழு, சுற்றுலாவிற்காக தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இவர்கள் சைக்கிள் பயணமாக திருச்சியிலிருந்து காரைக்குடிக்கு சென்று உணவு முறை மற்றும் கட்டிடங்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அங்கிருந்து மதுரையிலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு கேரளா செல்வதாக தெரிவித்தனர்.
இந்த பயணம் இயற்கையை ரசிக்கும் விதம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.